குற்றவாளியின் மகளுடைய பாஸ்போர்ட்டை நிபந்தனையின்றி புதுப்பித்து வழங்க வேண்டும்


குற்றவாளியின் மகளுடைய பாஸ்போர்ட்டை நிபந்தனையின்றி புதுப்பித்து வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 27 Jun 2018 5:17 AM IST (Updated: 27 Jun 2018 5:17 AM IST)
t-max-icont-min-icon

தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் மகளுடைய பாஸ்போர்ட்டை எந்த ஒரு நிபந்தனையும் இன்றி புதுப்பித்து வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி சலீம் அப்துல் கனி காஷி. இவரது மகள் சேனா முசாமில் மஜீத். இவர் தற்போது துபாயில் கணவருடன் வசித்து வருகிறார். மேலும் அங்குள்ள வங்கி ஒன்றில் வேலை பார்க்கிறார்.

இவருக்கு தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் மகள் என்பதால், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே மட்டும் பயணிக்கும் நிபந்தனையுடன் கூடிய பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தான் அனைத்து நாடுகளுக்கும் பயணிக்கும் அனுமதியுடன் கூடிய பாஸ்போர்ட்டு வழங்கவேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை வைத்தார். ஆனால் அவருடைய கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதனால் அவர் மும்பை ஐகோர்ட்டை நாடினார். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சவாந்த் மற்றும் ரேவதி மொகிதே அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “குண்டுவெடிப்பு குற்றவாளியின் மகள் என்பதை காரணம் காட்டி, ஒருவரது உரிமைகளை பறிக்க கூடாது.

மனுதாரர் எந்த தவறும் செய்ததாக தெரியவில்லை. எனவே அவருக்கு எந்த நிபந்தனையும் இன்றி பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரவேண்டும்” என்று உத்தரவிட்டனர்.


Next Story