கிராமப்புற ஏழை மக்களுக்கு வெளிப்படை தன்மையுடன் வீடுகள் ஒதுக்கப்படும் - மந்திரி யு.டி.காதர்
கிராமப்புற ஏழை மக்களுக்கு வெளிப்படை தன்மையுடன் வீடுகள் ஒதுக்கப்படும் என்று மந்திரி யு.டி.காதர் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை மந்திரி யு.டி.காதர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வீட்டு வசதித்துறையில் பல்வேறு திட்டங்கள் மூலம் கிராமப்புறங்களில் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி தரப்படுகின்றன. இந்த திட்டத்தில் உள்ள குறைகளை, களையும் நோக்கத்தில் தாலுகா பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டத்தை இன்று (அதாவது நேற்று) நடத்தினேன். இதில் தாலுகா பஞ்சாயத்து தலைவர்கள் கலந்துகொண்டு தங்களின் ஆலோசனைகள் மற்றும் குறைகளை தெரிவித்தனர்.
சமூக-பொருளாதார கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையில் ஏழ்மை நிலையை கண்டறிந்து வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த கணக்கெடுப்பு இன்று (நேற்று) முடிவடைகிறது. ஏழை மக்களின் நலன் கருதி இந்த கணக்கெடுப்பு பணியை வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். வீட்டு வசதி திட்டங்களில் பயனாளிகளுடன் நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்ள நாங்கள் முயற்சி செய்கிறோம். இதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படும்.
வீட்டு வசதி திட்டங்களில் பயனாளிகள் மனு அளித்த ஒரு வாரத்திற்குள் அதன் மீது முடிவு எடுத்து தகவல் தெரிவிக்கப்படும். பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஒரே வாரத்திற்குள் அதற்குரிய நிதி ஒதுக்கப்படும். வீட்டுமனை ஒதுக்கப்பட்ட 3 மாதத்திற்குள் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும். இதை மீறி காலஅவகாசம் வழங்கப்படமாட்டாது.
3 மாதத்திற்குள் வீடு கட்டாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனை ஒதுக்கீடு ரத்து செய்யப்பபடும். அந்த மனைகள் வேறு தகுதியான பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும். எங்கள் துறையில் ஒரு உதவி மையம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். மாநிலம் முழுவதும் இருந்து பயனாளிகள் உதவிமையத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.
வீட்டு வசதி திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க ஒன்றியத்திறகு ஒருவர் வீதம் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். வெளி ஒப்பந்த அடிப்படையில் அந்த அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள். பயனாளிகள் தங்களின் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம்.
2 மாதத்திற்குள் இதை செய்து முடிக்க வேண்டும். ஆதார் எண் அடிப்படையில் தான் மானியம் வழங்கப்படுகிறது. வீடுகள் ஒதுக்கப்படுவதில் பொது மற்றும் சிறுபான்மை பிரிவினருக்கான ஒதுக்கீட்டு எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற ஏழை மக்களுக்கு வெளிப்படை தன்மையுடன் வீடுகள் ஒதுக்கப்படும். இவ்வாறு யு.டி.காதர் கூறினார்.

Related Tags :
Next Story