காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து விவாதிக்க கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் பெங்களூருவில் வருகிற 30-ந் தேதி நடக்கிறது
தமிழ்நாடு-கர்நாடகம் இடையே காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை இருந்து வருகிறது.
பெங்களூரு,
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இரு மாநிலங்களும் மேல்முறையீடு செய்தன. இதில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவை சுப்ரீம் கோர்ட்டு குறைத்து தீர்ப்பு கூறியது. அதாவது தமிழகத்திற்கான நீர் ஒதுக்கீட்டு அளவு 192 டி.எம்.சி.யில் (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டது. கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டது.
மேலும் இந்த தீர்ப்பை அமல்படுத்த ஒரு ‘ஸ்கீம்‘ வகுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. கர்நாடகம் தனது பிரதிநிதிகளை அனுப்பாத நிலையில் மத்திய அரசு அந்த அமைப்புகளை உருவாக்கியது. அதன் பிறகு கர்நாடகம் சார்பில் கடந்த 23-ந் தேதி 2 பிரதிநிதிகளின் பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த தகவலை கடந்த 25-ந் தேதி மாநில அரசு அறிவித்தது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து சட்ட ரீதியாக கர்நாடகம் தொடர்ந்து போராடும் என்றும் சொல்லப்பட்டது.
அன்றைய தினம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடந்த காவிரி நீர் பிரச்சினை தொடர்பான கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிராக சட்ட ரீதியாக போராடுவது குறித்து விவாதிக்க அடுத்த 3 அல்லது 4 நாட்களில் கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து விவாதிக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் வருகிற 30-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு கர்நாடக சட்டசபை மற்றும் மேல்-சபை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், கர்நாடக எம்.பி.க்கள், காவிரி நதி படுகையில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் சட்ட நிபுணர்கள், நீர்வள நிபுணர்களும், மாநில அரசின் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.
முக்கியமாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் சில வழிகாட்டு நெறிமுறைகள் கர்நாடகத்திற்கு எதிராக உள்ளதாகவும், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றால் உரிய நியாயம் கிடைக்குமா? என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

Related Tags :
Next Story