விமானத்தில் பெண் கடத்தி வந்த ரூ.6¾ லட்சம் தங்க சங்கிலிகள் பறிமுதல்


விமானத்தில் பெண் கடத்தி வந்த ரூ.6¾ லட்சம் தங்க சங்கிலிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:15 AM IST (Updated: 29 Jun 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் பெண் கடத்தி வந்த ரூ.6¾ லட்சம் மதிப் பிலான தங்க சங்கிலிகளை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்துக்கு உள்ளூர் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, கொழும்பு போன்ற வெளிநாட்டு விமானங்கள் வந்து செல் கின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மலேசியாவிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு தனியார் விமானம் ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கி வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, மலேசியாவை சேர்ந்த ஆயிஷாகனி என்பவரை சோதனை செய்த போது, அவர் கழுத்தில் அதிகளவு தங்க சங்கிலிகளை அணிந்து இருந்தார். அது குறித்து அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்திய போது மலேசியாவில் இருந்து அவற்றை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். அதன் பேரில், அவர் அணிந்து வந்த 221 கிராம் தங்க சங்கிலிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சத்து 79 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார்.

தொடரும் சம்பவம்

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர், கொழும்பு போன்ற வெளிநாடுகளில் இருந்து சமீப நாட்களாக தொடர்ந்து தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்பட்டு வருகிறது. இது, அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

Next Story