தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் ஊர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மின்தடைதூத்துக்குடி மாவட்டம் மஞ்சள்நீர்காயல், ஸ்ரீவைகுண்டம், நாகலாபுரம், ஸ்ரீமூலக்கரை, ஓட்டப்பிடாரம் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.
எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஏரல், சிறுத்தொண்டநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்காணி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, ராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந்திப்பட்டி ஆகிய இடங்களில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.
ஓட்டப்பிடாரம்இதேபோல் குருவார்பட்டி, கோடங்கிப்பட்டி, வாதலக்கரை, காடல்குடி, துரைச்சாமிபுரம் பூதாலபுரம், நாகலாபுரம், சங்கரலிங்கபுரம், சல்லிசெட்டிப்பட்டி, சிவலார்பட்டி, வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பேட்மாநகரம், பராக்கிரமபாண்டி, பேரூர், ஸ்ரீமூலக்கரை, அனியாபரநல்லூர், மீனாட்சிபட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், செட்டிமல்லன்பட்டி, சீதாகுளம், சிவகளை, பெருங்குளம், பண்ணைவிளை, பண்டாரவிளை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குசாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், வீரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவல்களை தூத்துக்குடி ஊரக மின்வினியோக செயற்பொறியாளர் கமலா மற்றும் நகர்ப்புற மின்வினியோக செயற்பொறியாளர் தென்னரசு ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.