வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 30 Jun 2018 2:30 AM IST (Updated: 29 Jun 2018 8:14 PM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வாசுதேவநல்லூர், 

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தெப்பத்திருவிழா

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணிநாதர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தெப்பத்திருவிழா நடந்தது. முன்னதாக இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரி‌ஷப வாகனத்தில் அம்மையப்பன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தார்.

பின்னர் நாடார் உறவின்முறை மண்டகப்படிதாரர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் இரவு 10 மணிக்கு சுவாமி அம்மையப்பன் எழுந்தருளினார். அலங்கரிகக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமி அம்மையப்பன் நீராளி மண்டபத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவையொட்டி சிறப்பு வண்ண வானவேடிக்கைகள் நடந்தது.

நீதிபதி பங்கேற்பு

தெப்ப திருவிழாவில் சிவகிரி நீதிபதி நிலவேஸ்வரன், வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் குரூப்–ஆப் கல்லூரி சேர்மன் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன், நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் லெனின், கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன், நாடார் உறவின்முறை தலைவர் தவமணி, பள்ளிக்கமிட்டிச் செயலாளர் சுமங்கலி சமுத்திரவேலு, துணை தலைவர் ஆனந்தராஜ், பொன்மாரியப்பன், அ.தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் குமரேசன், ஒன்றிய அவைத்தலைவர் முகமது உசேன் மற்றும் நிர்வாகிகள் சீமான் மணிகண்டன், முருகையா உள்பட அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்களும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை சமுதாயத்தினர், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சிவலிங்கசேகர் உள்பட ஏராளமானோர் போலீசாரும், தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story