58–ம் கால்வாயில் தண்ணீர் திறக்காவிட்டால் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
வத்தலக்குண்டுவில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டுவில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் ஏ.எம்.எஸ் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில சட்ட ஆலோசகர் பழனிக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விருவீடு பகுதியில் குடிநீர் தட்டுபாட்டை போக்க வேண்டும். இந்த பகுதியில் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால், முருங்கைக்காய், அவரை உள்பட பல்வேறு விளைபயிர்கள் காய்ந்து வருகின்றன. 58–ம் கால்வாய் பணி முடிந்து தயாராக உள்ளது. எனவே 58–ம் கால்வாயில் தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். இல்லையெனில், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துவோம் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story