நொச்சிபாளையம், தெக்கலூர் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - கலெக்டரிடம் மனு
நொச்சிபாளையம், தெக்கலூர் பகுதிகளில் டாஸ்மாக் கடை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் திருப்பூர் நொச்சிபாளையம் பிரிவை சேர்ந்த பொதுமக்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- திருப்பூர் பல்லடம் ரோடு நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் கடை இருந்தது. இந்த டாஸ்மாக் கடையால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
அந்த வழியாக மாணவ-மாணவிகள் சென்று வர முடியாத அளவிற்கு மதுபோதையில் பலர் அங்கும் இங்குமாக மயங்கி கிடந்தனர். இதனால் அந்த டாஸ்மாக் கடைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தோம். இதன் விளைவாக அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. தற்போது மீண்டும் அந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
டாஸ்மாக் கடை மூடப்பட்ட பின்பு பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அந்த வழியாக மகிழ்ச்சியுடன் சென்று, வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைவது சிரமத்தை ஏற்படுத்தும். நொச்சிபாளையம் பிரிவு அருகே டாஸ்மாக் கடை அமைவதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறோம். டாஸ்மாக் கடை அமைவதை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் பரவியது. தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.
இதுபோல் அவினாசி, தெக்கலூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- அவினாசி, தெக்கலூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். இந்த பொதுமக்கள் விசைத்தறி, விவசாயம், பனியன் நிறுவன தொழிலாளி போன்ற வேலைக்கு சென்று வருகிறார்கள். மேலும், இந்த பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றனர்.
தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையால் பல பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இதன் பின்னர் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
பொதுமக்களும் எந்த சிரமமும் இன்றி இருந்து வந்தோம். இந்நிலையில் தெக்கலூர் கிராமத்திற்குள் வடுகபாளையம், செங்காளிபாளையம், ஆலாம்பாளையம் பசுமை நகர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
தெக்கலூர் கிராமத்திற்குள் டாஸ்மாக் கடை அமைய எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மாவட்ட கலெக்டர் இதன் மீது உடனே நடவடிக்கை எடுத்து, இதனை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story