பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு: ஆசிரியரை காரில் கடத்தி தாக்கிய 3 பேர் கைது
கவுந்தப்பாடி அருகே பணம் கொடுக்கல்-வாங்கலில் ஏற்பட்ட தகராறில் ஆசிரியரை காரில் கடத்தி தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தார்கள்.
கவுந்தப்பாடி,
கவுந்தப்பாடி அருகே உள்ள பாப்பாங்காட்டூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52). கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக விவசாய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுமதி (46).
ஆசிரியர் பழனிசாமி சீட்டும் நடத்தி வந்துள்ளார். இவரிடம் ஈரோட்டை அடுத்துள்ள சோலாரை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மனைவி கிருஷ்ணகுமாரி என்பவரும் சீட்டு போட்டுள்ளார். சீட்டு பணம் தருவது மற்றும் கொடுக்கல்-வாங்கலில் பழனிசாமிக்கும், கிருஷ்ணகுமாரிக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கிருஷ்ணகுமாரியின் மருமகன் ஈரோடு மாமரத்துபாளையத்தை சேர்ந்த சிலம்பரசன் (28), அவருடைய தம்பி இடையன்காட்டு வலசை சேர்ந்த சுகுமார்(26) மற்றும் மாமரத்துபாளையத்தை சேர்ந்த மாரியப்பன் என்கிற சதீஷ் (24) ஆகிய 3 பேரும் ஒரு காரில் பழனிசாமியின் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டில் இருந்த பழனிசாமியிடம், என் மாமியாருக்கு எப்போது சீட்டு பணம் தருவாய்? என்று கேட்டு சிலம்பரசன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் 3 பேரும் சேர்ந்து பழனிசாமியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதைப்பார்த்து தடுக்க வந்த சுமதியை தள்ளிவிட்டு 3 பேரும் சேர்ந்து பழனிசாமியை காரில் ஏற்றி கடத்தி சென்றுவிட்டதாக தெரிகிறது.
கண்முன்னே கணவர் காரில் கடத்தப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுமதி சத்தம்போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். ஆனால் அதற்குள் கார் சென்றுவிட்டது. இதுகுறித்து சுமதி உடனே கவுந்தப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனிசாமியை காரில் கடத்தியவர்களை வலைவீசி தேடினார்கள்.
இதற்கிடையே இன்று மாலை கவுந்தப்பாடி போலீசார் அய்யம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு கார் வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் காரை மறித்து நிறுத்தினார்கள். அப்போது உள்ளே காயங்களுடன் பழனிசாமி இருந்தார்.
அவரை கடத்திய சிலம்பரசன், சுகுமார், சதீஷ் ஆகிய 3 பேரும் இருந்தார்கள். உடனே போலீசார் பழனிசாமியை மீட்டு அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்கள். இதற்கிடைய காயத்துடன் இருந்த பழனிசாமி கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
போலீஸ் நிலையத்தில் 3 பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்றது. அப்போது பழனிசாமியை அவர்கள் காரில் கடத்தி கோபி, சென்னம்பட்டி போன்ற இடங்களுக்கு கொண்டு சென்றதும், காருக்குள்ளேயே அவரை அடித்து உதைத்ததும் தெரியவந்தது. இதற்கிடையே போலீஸ் தேடுவது அறிந்து அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிடலாம் என்று வந்தபோதுதான் வாகன சோதனையில் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள். அதைத்தொடர்ந்து சிலம்பரசன், சுகுமார், சதீஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story