மதுரை விமானநிலையத்தில் 2 கிலோ தங்கம் சிக்கியது


மதுரை விமானநிலையத்தில் 2 கிலோ தங்கம் சிக்கியது
x
தினத்தந்தி 30 Jun 2018 9:30 PM GMT (Updated: 30 Jun 2018 7:39 PM GMT)

துபாயிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகாவினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டதுபோது பயணிகள் காத்திருப்பு இருக்கை அருகே இருந்த பையில் 2 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது.

மதுரை,

மதுரை விமானநிலையத்தில், துபாயிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகாவினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது பயணிகள் காத்திருப்பு இருக்கை அருகே இருந்த பையை சோதனை செய்தனர். அதில் 2 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த பையை பயணிகள் யாரும் உரிமை கொண்டாடப்படவில்லை. இதையடுத்து 2 கிலோ தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், தங்கம் இருந்த பையை விட்டு சென்ற மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story