முன்னாள் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
8 வழி பசுமை சாலைக்கு எதிராக போராட்டம் நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தேன்கனிக்கோட்டை, ஓசூர், பாப்பாரப்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாப்பாரப்பட்டி,
8 வழி பசுமை சாலையால் மக்கள் பாதிக்கப்படுவதை கண்டித்தும், முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபுவை தாக்கிய செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அமைப்பாளர் அனுமப்பா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், சேகர், மாவட்ட விவசாய சங்க செயலாளர் பிரகாஷ், மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சிவராஜ் நன்றி கூறினார்.
இதேபோல் ஓசூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். இதில் நிர்வாகிகள் சுரேஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சேதுமாதவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பாப்பாரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கண்ணன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ஜூனன், ராமச்சந்திரன், வட்ட செயலாளர் நக்கீரன், நிர்வாகிகள் சக்திவேல், ராஜாமணி, குப்புசாமி, லோகு, சிலம்பரசன், சின்னராஜி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்ட முடிவில் சண்முகம் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story