நீடாமங்கலம் அருகே, இருதரப்பினர் இடையே மோதல்: பெண் போலீஸ்- கணவர் கைது

நீடாமங்கலம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெண்போலீஸ் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவருடைய மகன் குணசேகரன் (வயது 30). விவசாயி. இவர் நெல் அறுவடைக்காக கதிர் அறுக்கும் எந்திரத்தை நீடாமங்கலம் பகுதியில் இருந்து வாடகைக்கு எடுத்துச் சென்று நேற்று முன்தினம் காலை அனுமந்தபுரம் மேலத்தெருவில் இறக்கி கொண்டிருந்தார். அப்போது கொரடாச்சேரியில் இருந்து தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணனுக்கு சொந்தமான கார் அவ்வழியாக வந்தது. காரில் இருந்தவர்கள் காருக்கு வழிவிட கதிர் அறுக்கும் எந்திரத்தை சீக்கிரமாக கீழே இறக்கக்கூடாதா என கேட்டனர். இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த மகேஷ் (33), ரகுராமன் (28), சரவணன் (27) ஆகிய 3 பேரும் சேர்ந்து குணசேகரன் மற்றும் அதே ஊரை சேர்ந்த மகேந்திரன் ஆகிய 2 பேரையும் தாக்கினர். இதில் குணசேகரன் படுகாயமடைந்தார். இதனை பார்த்த அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து மகேஷ், ரகுராமன், சரவணன் ஆகிய 3 பேரையும் தாக்கி, அவர்கள் வந்த காரையும் சேதப்படுத்தினர். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த குணசேகரனை நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கிராமத்தினர் பிடித்து வைத்த 3 பேரையும், சேதமடைந்த காரையும் போலீசார் மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இருதரப்பினரின் ஆதரவாளர்கள் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தின் முன் குவிந்தனர். இதை தொடர்ந்து மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் நீண்ட நேரம் இருதரப்பினரிடையே விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பூண்டி கலைவாணனுக்கு சொந்தமான காரில் வந்த மகேஷ், ரகுராமன், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து நேற்றுமுன்தினம் இரவு தஞ்சாவூர் (வன்கொடுமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதேபோல் மகேஷ் அளித்த புகாரின் பேரில் அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், வினோத், பெண் போலீஸ் கிர்த்திகா, அவருடைய கணவர் காமராஜ் உள்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் போலீஸ் கிர்த்திகா, அவருடைய கணவர் காமராஜ் ஆகியே 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள கிர்த்திகா எரவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். தற்போது மருத்துவ விடுப்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story