என்ஜினீயர் வீட்டில் கைவரிசை: பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை
மதுரை திருப்பாலை பாலாஜி நகரில் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை திருப்பாலை பாலாஜிநகரை சேர்ந்தவர் அஜிஸ்ரகுமான் (வயது 62). கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது மாமியார் இறந்துவிட்டதால் குடும்பத்தினருடன் சென்னை சென்றார். பின்னர் நேற்று மதுரை திரும்பினார்கள். அப்போது அவர்களின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 பவுன் தங்கநகைகள், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் ஒரு மடிக்கணினியும் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் அஜிஸ்ரகுமான் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story