8 வழிச்சாலையை எதிர்ப்பவர்கள் மீது அடக்குமுறை சட்டங்களை ஏவுவது கண்டிக்கத்தக்கது


8 வழிச்சாலையை எதிர்ப்பவர்கள் மீது அடக்குமுறை சட்டங்களை ஏவுவது கண்டிக்கத்தக்கது
x
தினத்தந்தி 2 July 2018 4:15 AM IST (Updated: 2 July 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

8 வழிச்சாலையை எதிர்ப்பவர்கள் மீது அடக்குமுறை சட்டங்களை ஏவுவது கண்டிக்கத்தக்கது தொல்.திருமாவளவன் பேட்டி.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள அங்கனூரில் மாயவன் சுவாமி கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வந்திருந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று தூத்துக்குடியில் படுகொலையானவர்களின் நினைவேந்தல் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதில் அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக சக்திகள் என்னும் அமைப்பின் பெயரில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். காவல்துறை நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுக்கூட்டம் அமைதியான முறையில் நடைபெற உள்ளது. சென்னை-சேலம் 8 வழிச்சாலையை எதிர்ப்பவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அடக்குமுறை சட்டங்களை ஏவுவது கண்டிக்கத்தக்கது. இந்த போக்கை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார். 

Next Story