ராசிபுரம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ராசிபுரம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடு போனது.
ராசிபுரம்,
ராசிபுரம் டவுன் வள்ளலார் கோவிலில் இருந்து கட்டனாச்சம்பட்டி செல்லும் வழியில் சின்ன எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மர்ம ஆசாமிகள் கோவிலின் இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அவர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழாவை முன்னிட்டு உண்டியல் திறக்கப்பட்டு அதில் இருந்த பணம் எடுக்கப்பட்டது. இதனால் உண்டியலில் ரூ.500 வரை திருட்டு போயிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஊத்துக்குளிகாடு பகுதியில் பழமையான பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் இந்த கோவிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மங்களாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த உண்டியலில் ரூ.1000-க்கும் மேற்பட்ட பணம் இருந்து இருக்கலாம். இந்த 2 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story