காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அனுப்பர்பாளையம்,
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர்-அவினாசி ரோடு அம்மாபாளையத்தை அடுத்த ராக்கியாபாளையம் பத்மாவதிநகரை சேர்ந்தவர் நந்த குமார் (வயது 57). இவருடைய மகள் ஹர்ஷா (17). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூர் கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து ஹர்ஷாவை அழைத்து அவருடைய பெற்றோர் அறிவுரை கூறி, படிக்கும் போது காதல் வேண்டாம், எனவே காதலை கைவிடுமாறு கூறி உள்ளனர். மேலும் அவரை பெற்றோர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஹர்ஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story