நாகர்கோவிலில் 2 கோவில்களில் நகை திருடிய வாலிபர் பிடிபட்டார் போலீசார் தீவிர விசாரணை
நாகர்கோவிலில் 2 கோவில்களில் நகை திருடிய வாலிபர் நேற்று போலீசில் பிடிபட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வாத்தியார்விளையில் உள்ள முத்தாரம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களிலும் திருட்டு சம்பவங்கள் நடந்தன. காசி விஸ்வநாதர் கோவிலில் காசி விசாலாட்சி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகளை மர்ம நபர் அள்ளி சென்றார். இதே போல் முத்தாரம்மன் கோவிலில் முத்தாரம்மன் மற்றும் பத்திரகாளியம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 2 தங்க சங்கிலிகளை மர்ம நபர் திருடி சென்றார்.
அடுத்தடுத்த நாளில் நடைபெற்ற இந்த 2 சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவங்கள் பற்றி வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இந்த 2 சம்பவங்களிலும் ஒரே ஆசாமிதான் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகித்தனர். அதைத் தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோவிலில் சிக்கிய மர்ம நபரின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் சந்தேகத்தின் பேரில் நாகர்கோவில் காந்திநகரை சேர்ந்த பார்த்தீபன் (வயது 27) என்பவரை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், 2 கோவில்களிலும் நகை திருட்டில் ஈடுபட்டது பார்த்தீபன் தான் என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து கோவிலில் திருடிய தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை அவர் எங்கு பதுக்கி வைத்துள்ளார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் மீது வேறு ஏதேனும் திருட்டு வழக்குகள் இருக்கிறதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

Related Tags :
Next Story