வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க மத்தியஅரசை வலியுறுத்தி ரெயில் மறியல் 120 பேர் கைது
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க மத்தியஅரசை வலியுறுத்தி தஞ்சையில் ரெயில் மறியல் செய்ய முயன்ற 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை நடத்திய பின்பு தான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அந்த சட்டத்தையே தகர்க்கும் முறையில் சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை செல்லாததாக்கிட உடனடியாக மத்தியஅரசு அவசர சட்டத்தை இயற்றி பாதுகாக்க வலியுறுத்தியும், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய பா.ஜனதா அரசுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ரெயில் மறியலில் ஈடுபடுவதற்காக தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நுழைய முயற்சி செய்தனர்.
இவர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக நுழைவு வாயிலில் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், முருகேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிவிரைவு படை போலீசாரும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் போராட்டக்குழுவினர் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை தள்ளி கொண்டும், சில தடுப்புகள் மீது ஏறியும் ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் தரையில் அமர்ந்து பல்வேறு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார். இதில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் சொக்கா.ரவி, அரசமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேலு, மனோகரன், வக்கீல் ஜீவக்குமார், செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், உழவர் உரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கராசு, ஆதிதமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தமிழக மக்கள் புரட்சி கழக பொதுச் செயலாளர் மருதையன் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
இவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது ரெயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதி அளித்தால் தான் கைதாவோம் என்று சிலர் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஒரு தடுப்பை மட்டும் அகற்றிவிட்டு ரெயில் நிலைய வாசல் வரை செல்ல அனுமதி அளித்தனர். அதன்பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 18 பெண்கள் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் 20 நிமிடம் நடைபெற்றது.
தஞ்சை ரெயில் நிலையத்திற்குள் செல்லக்கூடிய நுழைவு பகுதியின் வழியாக யாரும் செல்ல முடியாத அளவுக்கு இரும்பு தடுப்புகளை போலீசார் அமைத்து இருந்ததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். பயணிகளை கூட நுழைவு பகுதியின் வழியாக செல்ல போலீசார் அனுமதி அளிக்காததால் பொருட்கள் பாதுகாப்பு அறையின் வழியாக ரெயில் நிலையத்திற்குள் பயணிகள் சென்றனர்.

Related Tags :
Next Story