சவுடு மண் குவாரிக்கு எதிர்ப்பு லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
பெரியபாளையம் அருகே சவுடு மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து குவாரியை முற்றுகையிட்டும், லாரிகளை சிறை பிடித்தும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.
இந்த ஏரியில் சவுடு மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் சவுடு மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி மக்கள், கடந்த 27-ந் தேதி ஏரியில் இருந்து சவுடு மண் எடுக்க கூடாது என்று தடுத்தனர். இதனால் அப்போது தற்காலிகமாக குவாரி நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சவுடு மண் குவாரி மீண்டும் இயங்குவது தொடர்பாக கன்னிகைபேர் கிராமத்தில் பொதுமக்களின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சவுடு மண் குவாரி இயங்க கிராம மக்களில் சிலர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில் நேற்று காலை ஏரியின் கரையை உடைத்து குவாரிக்குள் லாரிகளை கொண்டு சென்றனர். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சவுடு மண் குவாரியை முற்றுகையிட்டு, அங்கு வந்த லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும். ஆங்காங்கே பள்ளம் தோண்டுவதால் மழைகாலத்தில் கால்நடைகள் அதில் சிக்கி பலியாகும் என்று கூறினர். இதனால் கன்னிகைபேர்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையிலான போலீசார், லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை நீங்கள் தடுத்து நிறுத்துவது தவறு. உங்கள் போராட்டத்தை விலக்கி கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினைகளை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து எடுத்து கூறுங்கள். அல்லது நீதிமன்றத்துக்கு சென்று தடை உத்தரவு பெறுங்கள் என்றார்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story