8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சிறுமி ஹர்சிகா எழுதிய ஒரு பக்க கடிதம் சிக்கியது
தற்கொலை செய்துகொண்ட சிறுமி ஹர்சிகா எழுதியிருந்த ஒரு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
மும்பை,
காந்திவிலியில் தற்கொலை செய்துகொண்ட சிறுமி ஹர்சிகா எழுதியிருந்த ஒரு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இருப்பினும் அவளது தற்கொலைக்கான காரணத்தை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.
மும்பை காந்திவிலி தாக்கூர் வில்லேஜ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஹர்சிகா. 9-ம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன் அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டாள்.
அவள் தனது வாழ்க்கையை முடித்து கொள்வதற்காக மாடியில் இருந்து குதிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுமி ஹர்சிகா மாடியில் இருந்து குதித்ததை எதிர்புறம் உள்ள கட்டிடத்தில் வசித்தும் வரும் வாடகை கார் டிரைவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே போலீசார் சிறுமியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அவளது நோட்டுப்புத்தகத்தில் தான் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை விவரித்து சிறுமி ஹர்்சிகா ஒரு பக்க அளவிற்கு எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே தற்கொலை செய்து கொள்ளும் தனது முடிவுக்கு யாரும் காரணமில்லை என சிறுமி ஹர்சிகா அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாக தெரிவித்த துணை போலீஸ் கமிஷனர் வினய் குமார் ரத்தோடு, அவள் தற்கொலை செய்து கொண்டதற்காக எழுதி வைத்திருந்த காரணங்கள் மற்றும் அவளது பெற்றோரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் எதையும் தெரிவிக்க முடியாது என மறுத்துவிட்டார்.
மேலும் சிறுமி ஹர்சிகா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ காட்சியை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Related Tags :
Next Story