மோட்டார் சைக்கிள் உரசியதால் தகராறு: சாலையில் நடந்து சென்றவர் குத்திக்கொலை
மோட்டார் சைக்கிள் உரசியதால் நடந்த தகராறில் சாலையில் நடந்து சென்றவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
மும்பை,
மோட்டார்சைக்கிள் உரசியதால் ஏற்பட்ட தகராறில்சாலையில் நடந்து சென்றவர் குத்திக் கொலை செய்யப் பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மும்பை பைகுல்லா கோடப்தேவ் பகுதியை சேர்ந்தவர் பாேவஷ் கோலி. இவர் நேற்றுமுன்தினம் மாலை அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது உரசியபடி சென்றது. இதனால் கோபம் அடைந்த அவர், மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்றவரை திட்டி உள்ளார்.
இந்தநிலையில் அந்த ஆசாமி தனது நண்பர்கள் 2 பேருடன் அங்கு வந்து பாேவஷ் கோலியிடம் தகராறு செய்தார். இந்த தகராறு முற்றியதில் பாவேஷ் கோலியை அந்த ஆசாமிகள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டனர்.
இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த பாவேஷ் கோலியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story