வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.4½ லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.4½ லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
வேலூர்,
பேரணாம்பட்டு சின்னபஜார் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 25). இவர், நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த திருவள்ளூர் மாவட்டம் செய்யம்பாக்கத்தை சேர்ந்த நண்பரை கடந்த 2014-ம் ஆண்டு சந்தித்தேன். அவரிடம் வேலை தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தேன். அதற்கு அவர், ரூ.3 லட்சம் கொடுத்தால், சில மாதங்களில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், இதுபோன்று பணம் கொடுத்த பலர் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.
அதனை நம்பி சில மாதங்களில் அவரிடம் ரூ.3 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர், சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து சில மாதங்களில் நான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். அதற்கு அவர் விரைவில் வெளிநாட்டிற்கு அனுப்பி விடுவதாக கூறினார். ஆனால் இதுவரையும் வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை. மேலும், நான் கொடுத்த பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி மோசடி செய்து வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் கொடுத்த பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதேபோல் வாலாஜாவை சேர்ந்த தினேஷ் என்பவர் அளித்த மனுவில், என்னுடன் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த திருவள்ளூர் மாவட்டம் செய்யம்பாக்கத்தை சேர்ந்த நண்பர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1½ லட்சம் பெற்றுக்கொண்டார். இதுவரை அவர் வேலை வாங்கி தரவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுக்களை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Related Tags :
Next Story