வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2018 4:15 AM IST (Updated: 5 July 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கும் பொருட்டு மதுரையை சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன் என்பவர் அங்கு சென்று பணிகள் மேற்கொண்டார். இந்த நிலையில் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து போலீஸ்துறையினர் சென்னையில் அவரை கைது செய்ததை கண்டித்து கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். இதனால் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

இதேபோல் நீதிமன்ற பணிகளை புறக்கணித்த கரூர் வழக்கறிஞர் சங்கத்தினர், கரூர் நீதிமன்றத்தின் முன்புற பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு, செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ரமேஷ், அமர்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது வக்கீல் வாஞ்சிநாதன் மீதான பொய்வழக்கை ரத்து செய்து விட்டு அவரை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சம்பத், இணை செயலாளர் புகழேந்தி மற்றும் வக்கீல்கள் நன்மாறன், ஜெகதீசன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story