சிறுமி திருமணத்தை தடுக்க சென்ற போலீசாரை ஏமாற்ற, திருமணமான பெண் திடீர் மணமகள் ஆனார்
சிறுமி திருமணத்தை தடுக்க சென்ற போலீசாரை ஏமாற்ற, திருமணமான பெண் திடீர் மணமகள் ஆன சம்பவம் துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துறையூர்,
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள மதுராபுரி கிராமம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சேர்மன் மகன் ஆனந்த் (வயது 25) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் நேற்று அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
சிறுமிக்கு திருமணம் நடைபெறும் சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர், சைல்டு லைன் மற்றும் துறையூர் கிராம சேவிகா கோமளா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அவர்கள் அப்பகுதிக்கு சென்று 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்யக்கூடாது, அது சட்டப்படி தவறு என்று எடுத்துக்கூறினர். ஆனால், அதை பொருட்படுத்தாத திருமண வீட்டார் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர். இதுகுறித்து கிராம சேவிகா கோமளா துறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹாரூண் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
போலீசாரை கண்டதும், திருமண வீட்டார் கலக்கம் அடைந்து, மணப்பெண்ணான சிறுமியை அங்கிருந்து வேறு இடத்திற்கு அழைத்து சென்று ஒரு வீட்டில் வைத்து பூட்டினார்கள். பின்னர், போலீசாரை ஏமாற்ற அதே காலனியை சேர்ந்த சுரேஷ் மனைவி கவுசல்யாவின்(25) கழுத்தில் திருமண மாலையை போட்டு, அவரை திடீர் மணமகளாக்கி மாப்பிள்ளை ஆனந்த் அருகில் அமர வைத்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார், சிறுமியை காலனி முழுவதும் தேடினர். அப்போது அவர் ஒரு வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து அவரை மீட்டனர். பின்னர் அந்த சிறுமி, மணமகன் ஆனந்த் மற்றும் திருமண வீட்டார் அனைவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆனந்துக்கு நடைபெற இருந்தது 3-வது திருமணம் என்பது தெரியவந்தது. பின்னர் அந்த சிறுமி காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டாள். மற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story