கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விழுப்புரம், 

கள்ளக்குறிச்சி நாகப்பிள்ளை நகரை சேர்ந்தவர் கருணாகரன் மகன் குமார் என்கிற ஜெயராமன் (வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் மூதாட்டி ஒருவரை சொத்து பிரச்சினையில் கொலை செய்த வழக்கில் குமார் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் தொடர்ந்து இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story