திசையன்விளை அருகே திருமணமான 2½ மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


திசையன்விளை அருகே திருமணமான 2½ மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 7 July 2018 2:30 AM IST (Updated: 7 July 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே திருமணமான 2½ மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார்.

திசையன்விளை,

திசையன்விளை அருகே திருமணமான 2½ மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார்.

மீனவர்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி ராஜ தெருவை சேர்ந்தவர் ஜெரோதின் (வயது 28) மீனவர். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலை சேர்ந்த பிரின்கோ மகள் ரசிகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்றும் கணவன்–மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த ரசிகா வீட்டில் உள்ள படுக்கை அறையை உள்பக்கமாக பூட்டி கொண்டார். பின்னர் அவர் வெகுநேரமாக வெளியே வரவில்லை.

தூக்கில் தொங்கினார்

இதனால் சந்தேகம் அடைந்த ஜெரோதின் மற்றும் அவரது உறவினர்கள் கதவை தட்டினர். ஆனால் ரசிகா கதவை திறக்கவில்லை. உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரசிகா தூக்குப்போட்டு பிணமாக தொங்கிய நிலையில் இருந்தார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக உவரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

திருமணமான 2½ மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் விசாரணை நடத்த உள்ளார். திசையன்விளை அருகே திருமணமான 2½ மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story