விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 July 2018 4:00 AM IST (Updated: 9 July 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆவுடையார்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆவுடையார்கோவில்,

சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இதற்காக போராடி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆவுடையார்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா செயலாளர் எம்.எஸ்.கலந்தர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் அழகர் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Next Story