மாவட்ட செய்திகள்

கபினியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு + "||" + Water discharge from Kabini: Mettur dam water supply increase

கபினியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கபினியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கபினி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், நேற்று இரவு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
மேட்டூர்,

கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு அதிகளவில் தண்ணீர் வருகிறது. இதே போன்று கர்நாடக மாநிலத்தில் மழை பெய்யும் நேரங்களில் கிருஷ்ணராஜசாகர் அணை உள்பட மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்.


இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் மழை தீவிரம் அடைந்ததால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏற்கனவே இந்த அணை தன் முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் தமிழகம்-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்து அடைகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.72 அடியாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கபினியில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் ஒகேனக்கல் வந்தடைந்தது. மாலையில் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறை கடந்து கோட்டையூர், பண்ணவாடி வழியாக நேற்று இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,533 கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து இரவில் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர வாய்ப்பு உள்ளது. மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அணையில் இருந்து விரைவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
2. ஆயுதபூஜைக்கு பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் பூ, பழங்கள் விலை அதிகரிப்பு
திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஆயுத பூஜைக்கான பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பூ, பழங்களின் விலை அதிகரித்து இருந்தது.
3. தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிப்பதில் சேலத்துக்கு 2-வது இடம் - அரசு விழாவில் கலெக்டர் தகவல்
தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிப்பதில் சேலம் மாவட்டம் 2-வது இடம் பிடித்துள்ளதாக சேலத்தில் நடந்த அரசு விழாவில் கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
4. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
5. நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.58 அடியாக குறைந்தது
நீர்வரத்தை விட வெளியேற்றம் அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.58 அடியாக குறைந்தது.