மாவட்ட செய்திகள்

திருப்பூரில் தண்டவாள பராமரிப்பு பணி: கோவையில் இருந்து வெளியூர் செல்லும் ரெயில்களின் நேரம் மாற்றம் + "||" + Change the time away from the train from Coimbatore

திருப்பூரில் தண்டவாள பராமரிப்பு பணி: கோவையில் இருந்து வெளியூர் செல்லும் ரெயில்களின் நேரம் மாற்றம்

திருப்பூரில் தண்டவாள பராமரிப்பு பணி: கோவையில் இருந்து வெளியூர் செல்லும் ரெயில்களின் நேரம் மாற்றம்
திருப்பூர் பகுதியில் நடைபெறும் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கோவை ரெயில் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

கோவை,

திருப்பூர் பகுதியில் ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி வருகிற 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதன் காரணமாக கோவை ரெயில் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ரெயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:–

இதன்படி வருகிற 13–ந்தேதி கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரெயில் (எண் 12676) பிற்பகல் 2.55 மணிக்கு பதிலாக 4.35 மணிக்கு புறப்படும். மேலும் சதாப்தி ரெயில் (எண் 12244) கோவையில் இருந்து பிற்பகல் 3.25 மணிக்கு பதிலாக 4.55 மணிக்கு புறப்படும்.

கோவையில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரெயில் (எண் 12522) பிற்பகல் 3.33 மணிக்கு பதிலாக 5 மணிக்கு புறப்படுகிறது. மங்களூருவில் இருந்து கோவை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் ரெயில் (எண் 16860) பிற்பகல் 3.40–க்கு பதிலாக 4.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு செல்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வழியாக ஐதராபாத் செல்லும் சபரி விரைவு ரெயில் (எண் 17229) அன்றைய தினம் கோவையில் மாலை 4.35 மணிக்கு பதிலாக 5.10 மணிக்கு புறப்படும்.

14–ந் தேதி கோவையில் இருந்து ஆலப்புழாவுக்கு இயக்கப்படும் ரெயில் (எண் 13352) மதியம் 12 மணிக்கு பதிலாக 1 மணிக்கு புறப்படும். கோவை வழியாக எர்ணாகுளத்துக்கு செல்லும் கே.எஸ்.ஆர். பெங்களூரு விரைவு ரெயில் (எண் 12678) மதியம் 12.50 மணிக்கு பதிலாக 1.20 மணிக்கு புறப்படும். கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரெயில் (எண் 12676) பிற்பகல் 2.55 மணிக்கு பதிலாக 4.05 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் செல்லும் சதாப்தி ரெயில்(12244) பிற்பகல் 3.25 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும். 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து சேலத்துக்கு இயக்கப்படும் ரெயில் ( எண் 66602, 66603) ரத்து செய்யப்படுகிறது.

இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் சிக்னல் கோளாறால் நடுவழியில் நின்ற ரெயில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணிகள் நடந்து வந்தனர்
நெல்லையில் சிக்னல் கோளாறால் ரெயில் நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
2. மும்பையில் ரெயிலில் ஆராய்ச்சி மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபர் கைது
மும்பையில் பயணிகள் ரெயிலில் மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
3. பாம்பனில் புதிய ரெயில்வே தூக்குப் பாலம் கட்டப்படும் - ரெயில்வே அதிகாரி பேட்டி
பாம்பனில் புதிய ரெயில்வே தூக்குப்பாலம் கட்டப்படும் எனவும் இந்த பணி ஒரு வருடத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே கட்டுமான பிரிவு செயல் இயக்குனர் தெரிவித்தார்.
4. பாளையங்கோட்டையில் அடுத்தடுத்து சம்பவம் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
நெல்லையில் அடுத்தடுத்த சம்பவங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலியானார்கள்.
5. அடிப்படை வசதியில்லா பாசஞ்சர் ரெயில்கள்
மானாமதுரை–மன்னார்குடி மற்றும் விருதுநகர்–திருச்சி பாசஞ்சர் ரெயில்களில் அடிப்படை வசதியில்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.