மாவட்ட செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் 20 பேர் கைது + "||" + We have arrested 20 Tamil people in road blockades

நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் 20 பேர் கைது

நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் 20 பேர் கைது
புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை நகரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக அரசு சார்பில் புதிதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து புதுக்கோட்டை நகரில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராணியார் மகப்பேறு மருத்துவமனை ஆகியவை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.


இந்நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் பழைய இடத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராணியார் மருத்துவமனையை இயக்க வலியுறுத்தி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி மறுத் ததையடுத்து, நாம் தமிழர் கட்சியினர் மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புதுக்கோட்டை டவுன் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீ சாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 20 பேரை குண்டுக் கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி கைது செய்து, புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அனைவரும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. திருமங்கலம் அருகே கனரக வாகனங்களால் சாலை, குடிநீர் குழாய்கள் சேதம்
திருமங்கலம் அருகே லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் குடியிருப்பு பகுதிக்குள் செல்வதால் சாலைகள், குடிநீர் குழாய்கள் சேதமடைந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
2. பெரம்பலூரில் மின்வாரிய ஊழியர்கள் மறியல் 182 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 182 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியல்
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கரூரில் மின்வாரிய ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. நகை திருடியதாக கூறி அபராதம் விதித்ததால் மூதாட்டி சாவு; நடவடிக்கை கோரி உறவினர்கள் மறியல்
நகை திருடியதாக கூறி, மூதாட்டிக்கு அபராதம் விதித்ததால் அவர் இறந்தார். இதையடுத்து நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது இளம்பெண் திடீர் சாவு உறவினர்கள் சாலை மறியல்
ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது இளம்பெண் திடீரென்று இறந்தார். அவரது சாவுக்கு தவறான சிகிச்சையே காரணம் என கூறி அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.