மாவட்ட செய்திகள்

ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Liberation factions demonstrated in Hosur

ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஓசூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்,

ஓசூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகில், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் கனியமுதன், மண்டல செயலாளர் நந்தன், மாவட்ட பொருளாளர் மாயவன், ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது, அனைத்து கிராமங்களுக்கும் மயானம் மற்றும் பாதை வசதி செய்து தர வேண்டும். வீடு இல்லாத ஏழைகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், மேற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் வெங்கடேஷ், ஓசூர் நகர தலைவர் ஜீபி.கிருஷ்ணன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.