தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.1¾ கோடி மதிப்பீட்டில் எல்.இ.டி. விளக்குகள் மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்
தூத்துக்கடி மாநகராட்சியில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்கடி மாநகராட்சியில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–
எல்.இ.டி. விளக்குதூத்துக்குடி மாநகராட்சியானது மத்திய அரசால் ‘‘ஸ்மார்ட் சிட்டி’’ என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மின் ஆற்றல் சிக்கன நடவடிக்கையாக மாநகரின் எல்கையான எட்டயபுரம் சாலை முதல் புதுபஸ் நிலையம் வரை மற்றும் மாநகரின் மையப் பகுதியான பாளையங்கோட்டை ரோடு வி.வி.டி. சிக்னல் முதல் 3–ம் மைல் பாலம் விரையிலான பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. விளக்குகள் புதிதாக அமைப்பதற்கு ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பணிகள்எனவே இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு மாநகரின் பிரதான பகுதிகள் ஒளிரும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.