பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும் - மேல்-சபையில் மந்திரி எச்.டி.ரேவண்ணா தகவல்
பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று மேல்-சபையில் மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக மேல்-சபையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர் சந்தேஷ் நாகராஜ் கேட்ட கேள்விக்கு பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா பதிலளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதில் இருபுறத்திலும் 2 வழி சேவை சாலை அமைகிறது. அதாவது 10 வழிச்சாலையில் 6 வழிச்சாலை வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இருபுறத்திலும் தலா 2 வழி வீதம் 4 வழி சேவை சாலை அமைக்கப்படுகிறது. அந்த சேவை சாலை கிராம மக்கள் பயன்படுத்த அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் 2 திட்ட பணியாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதாவது ரூ.3,501 கோடியில் பெங்களூரு-நிடகட்டா வரையில் ஒரு திட்ட பணியும், ரூ.2,911 கோடியில் நிடகட்டா முதல் மைசூரு வரையில் இன்னொரு திட்ட பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து இந்த சாலை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படும்.
இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த திட்டத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும் பணி 64 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அடுத்த 1½ ஆண்டில் முதல் கட்ட பணிகள் நிறைவடையும். இவ்வாறு எச்.டி. ரேவண்ணா கூறினார்.

Related Tags :
Next Story