மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய இணைய தளம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய இணைய தளம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 July 2018 10:30 PM GMT (Updated: 11 July 2018 9:58 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளத்தை கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்காக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை சார்பாக மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளத்தை மாவட்ட கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட தகவலியல் அலுவலர் சாதிக்அலி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தியா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து கலெக்டர் கதிரவன் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட் டத்திற்கென இணையதள முகவரி https://krishnagiri.nic.in மற்றும் http://krishnagiri.tn.nic.in ஆகும். இந்த இணைய தளத்தில், மாவட்டத்தின் விவரங்கள், கிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி, சுற்றுலா தலங்கள், துறைகள், அறிவிப்புகள், சேவைகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்பான செய்திக்குறிப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் உள்ளது.

பார்வையாளர்கள் இரு மொழிகளிலும் உள்ளடக் கத்திற்கும் மாறலாம். இது வெளிப்புற தாக்குதல்கள், ஹேக்கர்கள் மற்றும் தேவையற்ற ஊடுருவல் ஆகியவற்றிலிருந்து பாது காப்பிற்கான வழி கொண்டி ருக்கிறது. இந்த இணையதளம் மொபைல், டேப்லெட், ஐபாட்கள், மடிக்கணினிகள் போன்ற பல சாதனங்களில் பார்க்க முடியும். இது மாற்றுத் திறனாளிகள் (ஊனமுற்ற நபர்கள்), சிறப்பு பார்வை குறைபாடு உடையவர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் உருவாக் கப்பட்டுள்ளது.

ஆகவே, மக்கள் இந்த இணையதள முகவரியில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு துறை சார்ந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். 

Next Story