மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு + "||" + Hogenakkal is continuously flooded in the coastal areas of the river

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து நேற்று வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பென்னாகரம்,

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 53,657 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இதனால் நேற்று பிலிகுண்டுலுவில் தண்ணீர்வரத்து மேலும் அதிகரித்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று இரவு தண்ணீர் வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை கண்காணிக்கும் பணியை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிகளில் நேற்று 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் குளிக்கவும் தடை நீடிக்கிறது. பரிசல்கள் இயக்கப்படாமல் ஆற்றங்கரையோர பகுதிகளில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன.

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளை போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். ஒகேனக்கல், மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒகேனக்கல்லுக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்காகவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் ஆர்வமாக வந்தோம். தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தோம். ஆனாலும் ஒகேனக்கல்லில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி வெள்ளத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். காவிரி ஆற்றின் அழகை ரசித்தோம். முதலைப்பண்ணை, மீன் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை பார்த்து மகிழ்ந்தோம்.

இவ்வாறு சுற்றுலா பயணிகள் கூறினர். 


தொடர்புடைய செய்திகள்

1. அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஆய்வு
அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் நேற்று கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஆய்வு செய்தனர். அப்போது மேலும் சில மதகுகளில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
2. காவிரி ஆற்றில் குளித்த தொழிலாளி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார் தேடும் பணி தீவிரம்
ஜேடர்பாளையம் படுகை அணை காவிரி ஆற்றில் குளித்த தொழிலாளி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
3. கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் அன்புமணி ராமதாஸ் பேட்டி
தண்ணீர் வீணாவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
4. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் தீவு போல் காட்சி அளிக்கும் கிராமங்கள்
கொள்ளிடம் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் கிராமங்கள் தீவு போல காட்சி அளிக்கின்றன. அங்கு வசித்து வந்த பொதுமக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
5. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரூர் தவுட்டுப்பாளையத்தில் மேலும் 118 பேர் முகாமில் தங்க வைப்பு
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதையொட்டி, தவுட்டுப்பாளையத்தில் 118 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அங்குள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.