மாவட்ட செய்திகள்

போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + The Transport Association of the Transport Association has demonstrated

போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்குவதை கண்டித்து போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகர கிளை அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் போக்குவரத்து துறையில் கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க துணை பொதுச் செயலாளர் முரளி தலைமை தாங்கினார்.


மத்திய சங்கத்தின் துணை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் கிளை தலைவர் சிவக்குமர், செயலாளர் வரதராஜன், பொருளாளர் பார்த்தீபன், நிர்வாகிகள் ரங்கன், முருகேசன், சென்றாயன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்குவதை கண்டித்தும், போக்குவரத்து துறைக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். 


தொடர்புடைய செய்திகள்

1. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4. கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில், தக்கலை பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.