மகளை கற்பழித்தவருக்கு 10 ஆண்டு ஜெயில்
மகளை கற்பழித்தவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டைனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
மும்பையை சேர்ந்த 11 வயது சிறுமியை அவளது 35 வயது தந்தை கற்பழித்து வந்தார். இதனால் சிறுமி அதிர்ச்சியில் இருந்தாள். இருப்பினும் தந்தை மிரட்டியதால் அவள் பயத்தில் இதுபற்றி வெளியில் சொல்ல முடியாமல் தவித்தாள்.
இந்தநிலையில், தான் படிக்கும் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, சைல்டு ஹெல்ப்லைன் எண் 1098 பற்றி அறிந்துகொண்ட சிறுமி, அந்த எண்ணில் தொடர்புகொண்டு தந்தையால் தனக்கு ஏற்பட்டு வரும் அவலத்தை கூறினாள். இதையடுத்து அவர்கள் சிறுமியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்து, அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய சிறப்பு கோர்ட்டு சிறுமியின் தந்தைக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Related Tags :
Next Story