மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவனத்தின் ரூ.101 கோடி சொத்துகள் முடக்கம் + "||" + Freezing assets of Rs 101 crore of private company

தனியார் நிறுவனத்தின் ரூ.101 கோடி சொத்துகள் முடக்கம்

தனியார் நிறுவனத்தின் ரூ.101 கோடி சொத்துகள் முடக்கம்
நிலக்கரி ஊழல் வழக்கில் தனியார் நிறுவனத்தின் ரூ.101 கோடி சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தை சேர்ந்த தனியார் நிலக்கரி சுரங்க நிறுவனம் சட்டவிரோதமாக தனது நிலக்கரி சுரங்கத்தை சத்தீஷ்கர் மாநிலத்தில் விரிவுபடுத்தியது. அந்த நிறுவனம் நிலக்கரி ஊழலில் ஈடுபட்டு பணமோசடி செய்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.101 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உள்ளனர்.

இதன்படி சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் உள்ள ரூ.80 கோடி மதிப்பிலான தொழிற்சாலை மற்றும் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ரூ.21 கோடி நிலம் ஆகியவை முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.