கொல்லங்கோடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பஞ்சாயத்து ஊழியர் பலி
கொல்லங்கோடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பஞ்சாயத்து ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
கொல்லங்கோடு,
கொல்லங்கோடு அருகே புல்லுவிளை, பாலவிளையை சேர்ந்தவர் வின்சென்ட் ஜான் (வயது45). இவர் சூழால் பஞ்சாயத்தில் தண்ணீர் திறந்துவிடும் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கலா (41) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
வின்சென்ட் ஜான் நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் கண்ணநாகம் சந்திப்புக்கு சென்றார். பொருட்கள் வாங்கிய பின்பு வீட்டுக்கு திரும்ப சென்று கொண்டிருந்தார்.
பாலவிளை பகுதியில் சென்ற போது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி, சாலையில் கவிழ்ந்தது. இதில் வின்சென்ட் ஜான் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும், மோட்டார் சைக்கிளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சாலையில் சிதறின.
விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். அவர்கள், படுகாயம் அடைந்தவரை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு வின்சென்ட் ஜான் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story