புதிய கால்நடை மருத்துவமனை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார்
அரியலூர் மாவட்டம் மணக்கால் கிராமத்தில் கால்நடைத்துறையின் சார்பில், புதிய கால்நடை கிளை மருத்துவமனையினை கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் மணக்கால் கிராமத்தில் கால்நடைத்துறையின் சார்பில், புதிய கால்நடை கிளை மருத்துவமனையினை கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது தாமரை ராஜேந்திரன் பேசுகையில், கால்நடையை வளர்த்து வரும் விவசாயிகள், தங்களது கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கு கால்நடை மருத்துவ கிளை நிலையத்தினை பயன்படுத்தி பயன்பெறலாம் என்றார். பின்னர் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், சினை பரிசோதனைகள் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கால்நடை வளர்ப்பு பயனாளிகளுக்கு தாது உப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு துறை) டாக் டர் முகமதுஆசிக், துணை இயக்குனர் டாக்டர் முருகன், அரியலூர் உதவி இயக்குனர் டாக்டர் கரிகால்சோழன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி மற்றும் கால்நடை மருத்துவர்கள், அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story