முன்னாள் படை வீரர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.4 ஆயிரம் கோடி ஓய்வூதியம் நிலுவை - சங்க நிர்வாகி தகவல்
முன்னாள் படை வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகை நாடு முழுவதும் ரூ.4 ஆயிரம் கோடி நிலுவையில் இருப்பதாக சங்க நிர்வாகி கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள், வீரமங்கையர் நலச்சங்க அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். செயலாளர் குமாரசாமி, பொருளாளர் அல்போன்ஸ், ஒருங்கிணைப்பாளர் தம்மையா உள்பட முன்னாள் படைவீரர்கள், இறந்த வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இதில் முப்படை முன்னாள் வீரர்கள் அமைப்பின் செயல் தலைவர் மோகனரங்கன், துணைத்தலைவர் ஹேஸ்டிங் ஆகியோர் கலந்து கொண்டு முன்னாள் படைவீரர்களுக் கான ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகள் குறித்து விவரித்தனர். அப்போது 32 பேர், தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்று கூறினர். அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க சங்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிஅளித்தனர்.
இதைத்தொடர்ந்து முப்படை முன்னாள் வீரர்கள் அமைப்பின் செயல்தலைவர் மோகனரங்கன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல மாநிலங்களில் முன்னாள் படை வீரர்களுக்கு வீட்டு வரி வசூலிப்பது இல்லை. ஆனால், தமிழகத்தில் வீட்டு வரி வசூலிக்கப்படுகிறது. இதை ரத்து செய்ய வேண்டும். அதேபோல் மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளில் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பில் ‘டி’ பிரிவில் 20 சதவீதமும், ‘சி’ பிரிவில் 10 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது ‘சி’ பிரிவில் மட்டுமே ஆட்கள் தேர்வு நடக்கிறது. எனவே, சி பிரிவில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் 70 சதவீதம் விதவைகளுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அதை முறையாக கடைபிடிப்பது இல்லை. இதனால் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை.
தமிழகத்தில் 2 லட்சம் முன்னாள் படைவீரர்கள் இருக்கிறோம். அதில் பலருக்கு வங்கிகள் சரியாக கணக்கிடாமல் ஓய்வூதியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ரூ.120 கோடி ஓய்வூதிய தொகை நிலுவையாக உள்ளது. இந்திய அளவில் கணக் கிட்டால் முன்னாள் படைவீரர்களுக்கு வழங்க வேண்டிய தொகை சுமார் ரூ.4 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இதனை முறையாக கணக் கிட்டு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story