கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர், விஷம் குடித்து தற்கொலை தண்டனைக்கு பயந்து விபரீதம்


கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர், விஷம் குடித்து தற்கொலை தண்டனைக்கு பயந்து விபரீதம்
x
தினத்தந்தி 15 July 2018 3:45 AM IST (Updated: 15 July 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமானில் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் தண்டனைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடியை சேர்ந்தவர் கோபி (வயது 37). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் நிலத்தில் வேலி அமைப்பது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கோபி, பாலாஜியை கொலை செய்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர். பின்னர் கோபி ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக அவர் திருவாரூர் மகிளா கோர்ட்டில் ஆஜராகி வந்தார். இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் நடந்த விசாரணையில் கோபிக்கு எதிராக சாட்சியங்கள் அளிக்கப்பட்டதால் தன்னுடைய குற்றம் நிரூபிக்கப்படும் என நினைத்தார். விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற கோபி, தண்டனைக்கு பயந்து பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கோபி உயிரிழந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story