கருவாடு காயவைக்கும் தளத்தை விட்டு வெளியேற கூறியதால் மீனவர்கள் போராட்டம்
நாகை அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்தை விட்டு வெளியேற கூறியதால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி இறங்கு தளத்தின் அருகே கருவாடு காய வைக்கும் தளம் உள்ளது. இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மீனவர்கள் கருவாடு காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதிக்கு நேற்று மாலை திடீரென மீன்வளத்துறை அதிகாரிகள் வந்து கருவாடு காயவைக்கும் தளத்தில் உலக வங்கி நிதியுடன் சுற்றுச்சுவர் கட்ட இருப்பதாகவும், இதனால் அந்த பகுதியில் உள்ள கூரை கொட்டகைகளை பிரித்து கொண்டு கருவாடு காயவைக்கும் தளத்தில் இருந்து மீனவர்களை வெளியேறும் படி கூறியதாக தெரிகிறது. மேலும் கருவாடு காய வைக்க மாற்று இடம் தருவதாகவும் கூறியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கருவாடு காயவைக்கும் தளத்தை விட்டு வெளியேற கூறியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லலிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் தீக்குளிப்பதற்காக மண்எண்ணெய் கேனை எடுத்து தங்களது உடலில் ஊற்றி கொள்ள முயன்றனர். இதனை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story