மண்டபத்தில் 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல், 5 பேர் தப்பி ஓட்டம்
தோணித்துறை கடற்கரையில் 30 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனைர்.
பனைக்குளம்,
மண்டபம் வடக்கு பகுதியான தோணித்துறை கடற்கரையில் நேற்று வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனவர் குணசேகரன், வனக்காப்பாளர் காளிதாஸ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது அவர்கள் நிற்காமல் வேகமாக சென்று விட்டனர். இதையடுத்து அவர்களை துரத்தி பிடிக்க முயன்றபோது வாகனத்தை நிறுத்திவிட்டு 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இரு சக்கர வாகனத்தில் இருந்த சுமார் 30 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் அலுவலகம் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய பெரியபட்டினத்தை சேர்ந்த முகமதுஉசேன், இபுராகிம், மண்டபம் முகாமை சேர்ந்த ராமு உள்பட 5 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story