பாம்பன் கடலில் மிதந்து வந்த பைபர் படகு, கடலோர போலீசார் கைப்பற்றி விசாரணை


பாம்பன் கடலில் மிதந்து வந்த பைபர் படகு, கடலோர போலீசார் கைப்பற்றி விசாரணை
x
தினத்தந்தி 17 July 2018 4:00 AM IST (Updated: 17 July 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் கடலில் மிதந்து வந்த பைபர் படகை கடலோர போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம்,

பாம்பன் தென் கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் இல்லாமல் பைபர் படகு ஒன்று மிதந்து வந்துள்ளது.இதை பார்த்த மீனவர்கள் அந்த படகை பிடித்து தெற்குவாடி கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்து கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து மண்டபம் கடலோர காவல் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் அந்த படகை பார்வையிட்டனர்.

அப்போது அந்த படகின் பதிவு எண்ணை வைத்து பார்க்கும்போது தூத்துக்குடியை சேர்ந்த மீன் பிடி பைபர் படகு என்பதும் காற்றின் வேகத்தால் நங்கூர கயிறுகள் அறுந்து கடலில் மிதந்து வந்துள்ளதாகவும் கடலோர போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்து யாருக்கு சொந்தமான படகு என்பது குறித்தும், தூத்துக்குடியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுஇருந்த பைபர் படகை கடத்தல் காரார்கள் யாரும் கடத்தல் பொருட்களை ஏற்றி கடத்தி வந்துள்ளனரா என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story