திருச்சி மாவட்டங்களில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை மறு நாள் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் வருகிறார்.
திருச்சி,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை (வியாழக்கிழமை) இரவு சென்னையில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப் படுகிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை திருச்சி வரும் கவர்னருக்கு ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு முடிந்த பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கார் மூலம் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு செல்கிறார்.
புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் தங்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனு வாங்குகிறார். அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்துகிறார். மாலை 3.30 மணிக்கு மேல் புதுக்கோட்டையில் இருந்து புறப்படும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் திருச்சி சுற்றுலா மாளிகைக்கு வருகிறார்.
மாலை 5 மணிக்கு திருச்சி சங்கம் ஓட்டலில் நடைபெறும் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகிறார். இரவில் சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
மறுநாள் (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி சங்கம் ஓட்டலில் காவேரி மருத்துவமனை சார்பில் நடைபெறும் உடல் உறுப்புகள் தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கும் கவர்னர், காலை 11 மணிக்கு கார் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறார்.
அங்கு தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு, அங்கிருந்து காரில் புறப்பட்டு நேராக திருச்சி விமான நிலையத்தை அடைகிறார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று புதுக்கோட்டையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. லலிதா லட்சுமியிடம் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் ரகுபதி எம்.எல்.ஏ., செல்லப்பாண்டியன் ஆகியோர் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட அனுமதி கேட்டனர்.
அதற்கு அனுமதி அளிக்க முடியாது என டி.ஐ.ஜி. கூறிவிட்டார். ஆனாலும் கருப்பு கொடி காட்டும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என தி.மு.க.வினர் தெரிவித்து உள்ளனர்.

Related Tags :
Next Story