நடிகை ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது


நடிகை ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது
x
தினத்தந்தி 19 July 2018 4:15 AM IST (Updated: 19 July 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

நடிகை ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது நடிகர் கார்த்தி பேட்டி.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டைக்கு நேற்று வந்த நடிகர் கார்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடைகுட்டி சிங்கம் திரைப்படம் வெற்றிபடமாக அனைத்து திரையரங்கிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை பார்த்து விட்டு துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பாராட்டி கடிதம் எழுதி உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நடிகை ஸ்ரீரெட்டி எந்தவித ஆதராமில்லாமல் தினமும் ஒரு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரிடம் ஆதாரம் இருந்திருந்தால், போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து இருப்பார். ஆதாரமில்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதில் பாதிக்கப்பட்டவர்களும், நடிகர் சங்க உறுப்பினர்களும், தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் புகார் மனு அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புதுக்கோட்டையில் உள்ள ஒரு திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தை நடிகர் கார்த்தி, இயக்குனர் பாண்டியராஜனுடன் பார்த்தார். அப்போது படம் பார்க்க வந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் நடிகர் கார்த்தி கலந்துரையாடினார். 

Next Story