புதிய பாடத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர்-வேப்பூர் கல்வி மாவட்ட முதுநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு
மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பாடவாரியாக புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர்,
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் செயல்பாட்டிற்கு இனங்க பெரம்பலூர் மற்றும் வேப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பாடவாரியாக புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்டங்கள் அளவில் பிளஸ்-1 வகுப்பு தாவரவியல் மற்றும் உயிரி தாவரவியல் பாடத்திற்கான புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்பு சிறுவாச்சூர் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. பயிற்சி வகுப்பில் புதியபாட திட்டத்தின்படி பாடப்பொருள் சார்ந்த கற்பிக்கும் முறைகள், கற்பிக்கும் உத்திகள் மற்றும் வகுப்பறையில் பயன்படுத்தும் முறை சார்ந்த 40 முதுநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் கோடி, பயிற்சியாளர்களான முதுநிலை ஆசிரியர்கள் காமராஜ், கலியமூர்த்தி, சுரேஷ், அரிவேந்தன், அர்ச்சுனன், முத்துக்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். முன்னதாக இந்த பயிற்சி வகுப்பினை அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் மாநில இணை இயக்குனர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story