குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்காத ஒப்பந்ததாரர்கள் மீது வழக்கு தானே மாநகராட்சி எச்சரிக்கை
குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்காத ஒப்பந்ததாரர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தானே மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தானே,
குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்காத ஒப்பந்ததாரர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தானே மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.
குண்டும், குழியுமான சாலைகள்
தானேயில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பல்லாங்குழி சாலைகளால் அதிகளவு விபத்துகளும் ஏற்படுகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நடந்த தானே மாநகராட்சி நிலைக்குழு கூட்டத்தில் குண்டும், குழியுமான சாலைகள் குறித்து எதிர்க்்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அப்போது சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வழக்குப்பதிவு
இது குறித்து மாநகராட்சி என்ஜினீயர் அனில் பாட்டீல் கூறியதாவது:-
குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்காத ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். புதிய சாலைகள் சேதமடையவில்லை. சேதமடைந்த சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும். இதேபோல ஒப்பந்ததாரர்கள் தரமான பொருட்களை கொண்டு சாலைகளை சீரமைக்கிறார்களா? என்பது கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story