பெட்டமுகிலாளம் மலை கிராமத்தில் 82 இருளர் இன மக்களின் குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள்
பெட்டமுகிலாளம் மலை கிராமத்தில் 82 இருளர் இன மக்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளியில் துணை மின் நிலையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை ரூ.168 கோடியே 6 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது இந்த பணிகளை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பணிகளை விரைந்து முடிக்க அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
தொடர்ந்து தேன்கனிக்கோட்டை தாலுகா மலை கிராமமான பெட்டமுகிலாளத்தில் 82 இருளர் இன மக்கள் குடியிருப்புகளுக்கு ரூ.10 லட்சத்து 7 ஆயிரத்து 590 மதிப்பில் மின் இணைப்புகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ், பர்கூர் சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைமை பொறியாளர் அப்துல் ரகீம், மின் பகிர்மான இயக்குனர் ஹெலன், மின் வினியோக இயக்குனர் செந்தில் வேலன், மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால், மின்வாரிய அதிகாரிகள் ஜெயக்குமார், ஏஞ்சலா சகாயமேரி, குமார், புஷ்பலதா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலை வாழ் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார். இந்த மாவட்ட அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி என்னிடம் மலை கிராமமான பெட்டமுகிலாளத்தில் உள்ள இருளர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
இதையடுத்து நான் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை குறித்து தெரிவித்து இன்று 82 குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. யானைகள், வன விலங்குகள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் சிறப்பாக முடிந்து வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மலை கிராமத்தில் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் இணைப்பு கேட்டு கோரிக்கை வைத்துள்ளர்கள். இந்த பணிகளுக்கு ரூ.60 லட்சம் ஒதுக்கி டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகள் நிறைவடையும். மலை கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
மலை கிராமங்களில் உள்ள விடுபட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பல ஆண்டுகளாக மின்சாரத்தை பார்க்காத இந்த பகுதி மக்களுக்கு இன்றைய தினம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளை நன்றாக படிக்க வைத்திட வேண்டும். 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்க கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த பகுதி மக்கள் கொடுத்துள்ள அனைத்து மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தேன்கனிக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் 692 பேருக்கு ரூ.2 கோடியே 29 லட்சத்து 30 ஆயிரத்து 826 மதிப்புள்ள நல உதவிகளை அமைச்சர்கள் பி.தங்கமணி, பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தராஜ், தர்மபுரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு தலைவர் தென்னரசு, கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், சூளகிரி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஏ.வி.எம்.மது, தேன்கனிக்கோட்டை முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சம்பங்கி ராமரெட்டி, கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story